பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் இவரா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் அமெரிக்கா சென்று திரும்பிய அவருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கியபோது அவர் திடீரென படப்பிடிப்புக்குச் சென்றார். அந்நிலையில் அவரது மருமகள் சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே தற்போது உலகநாயகனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.