விஜய் வில்லனுக்கு ஜோடியாக்கும் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

விஜய் நடித்த துப்பாக்கி என்ற வெற்றி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வித்யூத் ஜம்மாவால். இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வித்யூத் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே வித்யூத்துடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கவுள்ள இந்த படத்தில் வித்யூத் என்.ஆர்.ஐ தொழிலதிபராகவும், அவரை காதலிக்கும் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு சிறிய நகரத்து பெண்ணாகவும், சொந்தமாக முடிவெடுக்கும் துணிச்சலான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வித்யூத்-ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது;.இந்த படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இயக்குனர் மகேஷ் கூறியுள்ளார்.

More News

திரைத்துறை பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்ல முடிவு: விஷால் அறிவிப்பு

திரைத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு அரசிடம் வேண்டுகோள் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்

மெலடி பாடல்களை ரசிப்பதற்கு என்றே எந்த காலத்திலும் ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. எந்த காலத்திற்கும் உரிய வகையில் மெலடி பாடல்களை இசையமைப்பதில் ஒருசில இசையமைப்பாளர்களே புகழ் பெற்றுள்ள

வாய்ப்புகாக படுக்கை விஷயத்தில் பொய் சொன்னாரா ரகுல்? உண்மையை உடைக்கும் பிரபல நடிகை

ரகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கூறியபோது, 'மற்ற இடங்களில் எப்படியோ, தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இல்லை

சுசிலீக்ஸ் போல் ஸ்ரீலீக்ஸ்: பிரபல நடிகர்கள் கலக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூகவலைத்தள பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில் இடமில்லை: வேற மாநிலத்திற்கு போங்க: கமல், ரஜினியை தாக்கிய முதல்வர்

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர்களின் அரசியல் வருகை அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.