ஸ்ருதிஹாசனின் முதல் மேடை: குட்டிப்பெண்ணாக இருக்கும்போதே அசத்திய வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் குட்டிப் பெண்ணாக இருக்கும் போது ஏறிய முதல் மேடை குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் தனது மகள் ஸ்ருதிஹாசனை முதல் முறையாக மேடையில் அறிமுகம் செய்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குட்டி பெண்ணாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அழகிய தமிழில் பேசி பார்வையாளர்களை அசத்தி உள்ளார். ’நான் சின்ன பெண் தான், நான் பாடிய பாடல் நன்றாக இருந்தால் கை தட்டுங்கள், நன்றாக இல்லை என்றாலும் கைதட்டுங்கள் என்று மழலை குரலில் அவர் கூறியதை அடுத்து அரங்கமே எழுந்து கைதட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ருதிஹாசன் ’இது ஒரு அழகிய நினைவகம் என்றும், எனது முதல் நிகழ்ச்சியில் பாடலை பாடியது நன்றாக நினைவிருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்காக அப்பா அம்மாவுடன் நான் பலமுறை ஒத்திகை பார்த்தேன் என்றும் முதல் முறையாக கைதட்டலின் சக்தி என்ன என்பதை நான் உணர்ந்த தருணம் இது’ என்றும் அவர் கூறினார்.
’என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்து, மேடையையும் அறிமுகப்படுத்தி, எப்போதும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக கலை இருப்பதற்கு காரணமான என் பெற்றோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் ’சிங்கப்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியின் அரிய வீடியோவை கண்டுபிடித்து என்னிடம் கொடுத்த எனது ரசிகர்களுக்கு நன்றி’ என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com