close
Choose your channels

தமன்னா ஆணாக இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன்: பிரபல நடிகை

Saturday, March 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனும், பிரபல நடிகையுமான தமன்னாவும் மிக நெருக்கமான தோழிகள் என்பது தெரிந்ததே. இருவரும் பார்ட்டி, பப் ஆகியவற்றில் கலந்து கொண்டு தங்கள் நட்பை தொடர்ந்து வருகின்றனர். இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டது குறித்த சில ஹாட்டான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த ஸ்ருதிஹாசன், 'தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்றிருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்' என்றும் கூறினார்.

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாகவும் இவரை கமல் மற்றும் சரிகாவுக்கு ஸ்ருதிஹாசன் அறிமுகம் செய்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றுவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment