42 ஆண்டுகள் கழித்து ரீமேக் ஆகும் கமல்-ரஜினி படம்: முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரீமேக் செய்யப்பட்டு வருவது தெரிந்ததே. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ’பில்லா’ உள்பட பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்து 42 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் ஒன்று தற்போது ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா உள்பட பலர் நடிப்பில் ருத்ரையா என்பவர் இயக்கிய திரைப்படம் ’அவள் அப்படித்தான்’. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் கடந்த 1978ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த நிலையில் இந்த படம் தற்போது ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

அதர்வா நடித்த ’பானா காத்தாடி’ ’செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது. கமலஹாசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கவும், ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் ஸ்ரீபிரியா நடித்த முக்கிய கேரக்டரில் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 42 ஆண்டுகளுக்கு முன் கமல், ரஜினி இணைந்து நடித்த திரைப்படம் ஒன்று தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது