சங்கமித்ராவில் இருந்து திடீரென விலகிய ஸ்ருதிஹாசன்! காரணம் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
'பாகுபலி 2' படத்தை அடுத்து தென்னிந்திய திரையுலகில் தயாராகும் இன்னொரு பிரமாண்டமான சரித்திர திரைப்படமான 'சங்கமித்ரா' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. மேலும் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன், இந்த படத்திற்காகவே வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தார். இந்த நிலையில் 'சங்கமித்ரா' படத்தில் இருந்து திடீரென விலகும் முடிவை ஸ்ருதிஹாசன் எடுத்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
"துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.
படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், 'சங்கமித்ரா' படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.
ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' படத்துக்காக தயாராகி வருகிறார்'. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் வேறு நடிகையை படக்குழு முடிவு செய்யும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout