பிரிட்டன் இசைக்குழுவினர்களுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்னரே ஆல்பம் தயாரிப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அடிப்படையில் அவர் ஒரு நல்ல பாடகியும்கூட. தனி ஆல்பங்கள் உள்பட புலி, வேதாளம் போன்ற பல படங்களில் அவர் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் விரைவில் பிரிட்டன் இசைக்குழுவினர்களுடன் இணைந்து ஒரு ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் பாடவுள்ளாராம். சமீபத்தில் லண்டன் சென்ற அவர் பிரிட்டனின் முன்னணி இசை நிறுவனமான Dinosaur Pile-Up குழுவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் பாடுவதோடு பாடலை எழுதவும் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது லண்டனில் இருக்கும் ஸ்ருதிஹாசன் இந்த ஆல்பத்திற்காக தயாராகி வருவதாகவும் விரைவில் இந்த ஆல்பம் குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஷாலின் 'மருது' சென்சார் தகவல்கள்

குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் அடுத்தபடமான 'மருது' திரைப்படம் மே 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் இணைவாரா பிரபல நடிகர்?

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

முத்தையாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. விஷால் உறுதி

'குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கியுள்ள 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.....

அன்னையர் தினத்தில் விஷால் செய்த மகத்தான பணி

நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்ட தினம் முதல் அவர் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி கஷ்டப்படும் பொதுமக்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை தனது சொந்த பணத்தின் மூலமும், டிரஸ்ட் மூலமும் செய்து வருகிறார். அவருடைய சமூக சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்....

விஷால்-ராதாரவி சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது அரசியல்வாதிகளுக்கு இணையாக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ததை பார்த்தோம்....