கமல் எனக்கு தந்தை மட்டுமல்ல! ஸ்ருதிஹாசன் பெருமிதம்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

பிரபல நடிகையும் கமலின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன் நடித்த பாலிவுட் படமான பெஹன் ஹோகி தேரி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் ஸ்ருதிஹாசனின் நடிப்பை அனைத்து ஊடகங்களும் பாராட்டின
இந்த நிலையில் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் பள்ளி கால தோழிகளுக்காக சென்னையில் ஒரு சிறப்பு காட்சியை ஸ்ருதிஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். படத்தை பார்த்து முடித்த பின்னர் கமல்ஹாசன், ஸ்ருதியின் நடிப்பை பாராட்டியதோடு படத்தைப் பற்றி ஸ்ருதியிடம் நிறைய பேசினார். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியபோது, 'அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட. அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது' என்று கூறினார்.
இந்த படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றுபயணம் செய்த ஸ்ருதிஹாசன், விரைவில் லண்டன் சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் இறதிக்கட்ட பணிகளில் ஈடுபடவிருக்கிறாராம். இந்த இசை ஆல்பம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.