ஸ்ருதிஹாசன் - கெளதமி இடையே என்னதான் நடக்கின்றது. ஒரு நீண்ட விளக்கம்
Tuesday, August 16, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும் கெளதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் கெளதமிக்கும் இடையே இந்த படத்தின் ஆடை வடிவமைப்பு குறித்து கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், கெளதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்றும் வதந்தி பரவி வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் செய்தித்தொடர்பாளர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "தனக்கென்று ஒரு தனி ஸ்டைல்...தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.
தன்னுடைய தந்தையின் 'சபாஷ் நாயுடு" படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்'.
சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி - கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. "ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..." என்று கூறியுள்ளார். இந்த நீண்ட விளக்கத்தால் ஸ்ருதி-கெளதமி வதந்தி தவிடுபொடியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments