காதலனை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும், இந்த காதலுக்கு கமல் மற்றும் சரிகா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த காதல் பிரேக் அப் ஆகி முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், 'மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்' என தத்துவார்த்தமாக பதிவு செய்துள்ளார். முன்னதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மைக்கேலின் புகைப்படங்களையும் அவர் நீக்கிவிட்டார்.

இதேபோல் மைக்கேல் கோர்சாலே தனது சமூக வலைத்தளத்தில், வாழ்க்கை உலகின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து துரதிர்ஷ்டவசமாக நம்மை காப்பாற்றுகிறது. எனவே நாம் தனியாக இருப்பதுபோல் நடக்க வேண்டும், ஆனால் இந்த இளம் பெண் எப்போதும் எனது சிறந்த துணையாக இருப்பார், எப்போதும் ஒரு நண்பராக அவர் எனக்கு இருப்பார் என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

More News

இதை தமிழ்ப்படத்திற்கும் செய்யலாமே? தியேட்டர் அதிபரிடம் கேள்வி எழுப்பிய விஷால்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' இன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையில் வெளியாகும் சமந்தாவின் அடுத்த படம்!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, வெற்றிப்படமாகவும் அமைந்தது.

எனக்கு இதுவரை யாரும் சொன்னதே இல்லை! சேரன் காட்டம்

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகளின் பிறந்த நாளின்போது சங்கத்தின் சார்ப்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

பத்து ரூபாய்க்கு 8 மணி நேரம் போதை! விளைவு தெரியாமல் பயன்படுத்தும் சிறுவர்கள்! கண்டுபிடிப்பது எப்படி?

இந்த போதை பழக்கம் வடமாநில இளைஞர்களிடம் இருந்து, தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது...

திரைப்படமாகிறது தங்கமங்கை வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் திரைப்படமாக்கப்படுகிறது.