கமல்ஹாசன் முடிவால் ஸ்ருதி, அக்சரா அதிருப்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவருடைய அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவில் இருந்து விரைவில் விலகவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த முடிவால் அவருடைய இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கமல் கூறியபோது, 'நான் முழுநேர அரசியல்வாதியாக மாறவும், சினிமாவில் இருந்து விரைவில் வெளியேற எடுத்த முடிவையும் எனது இரு மகள்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக ஸ்ருதிஹாசன் எனது முடிவால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். இருவரையும் கமல் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் ஸ்ருதிஹாசனும், கமல்ஹாசனின் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தில் அக்சராஹாசனும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com