'குக் வித் கோமாளி' ஸ்ருதிகாவின் திருமண புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்கள்..!

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

’குக் வித்கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சூர்யா நடித்த ’ஸ்ரீ’ மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’நள தமயந்தி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு சீரியசாக குக்காக இல்லாமல் கோமாளி போலவே ஜாலியாக இருந்தார் என்றாலும், இந்த சீசனின் டைட்டில் வின்னர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல ஜாலியான புகைப்படங்களை வெளியிடுவார் என்பதும் அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ருதிகாவின் திருமண நாளை முன்னிட்டு அவர் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மிகவும் ஸ்லிம்மாக அழகாக அவர் இந்த புகைப்படத்தில் உள்ளதை அடுத்து ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவில் ஸ்ருதிகா கூறியபோது, ‘இத்தனை வருடங்களில் என்னுள் சிறந்ததை மட்டுமே வெளிக்கொண்டு வந்த அவருக்கு, என்னை போலவே என்னை நேசித்த அவருக்கு நான் நன்றி செலுத்திக்கொள்கிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை தந்து, எனது முதுகெலும்பாக இருந்து, எனக்கு ஆதரவாக இருக்கும் உண்மையான தூண் தான் எனது கணவர். இந்த நாளில் கடவுள் எனக்கு இந்த மனிதரை தந்ததை ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி உண்மையாகவே என்னுடன் வாழ்ந்து வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.