'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்? ஸ்ருதிகா விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
’குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரம் சனி ஞாயிறு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஸ்ருதிகா மற்றும் அம்மு அபிராமி ஆகிய இருவருமே வரவில்லை. அம்மு அபிராமி புதிய படத்தின் படப்பிடிப்பு காரணமாக வரவில்லை என்ற நிலையில் ஸ்ருதிகா ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த வாரம் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் வரவில்லை. அதனால் எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்தன. அத்தனை மெசேஜ்களையும் ஒவ்வொன்றையும் படித்தேன். நீங்கள் என் மேல் வைத்த அன்பை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன் என பலர் கேள்வி கேட்டனர். உங்கள் அனைவருக்கும் பதிலளிக்க இந்த வீடியோவை நான் வெளியிடுகிறேன்.
இந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி கடந்த மாதமே படப்பிடிப்பு நடந்தது. அன்றைய தினம் நான் காய்ச்சல் காரணமாக உடல்நிலை முடியாமல் இருந்தேன். ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்வதற்கு தயாராகி விட்டேன். ஆனால் என்னால் அங்கு இருக்கும் மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இப்போது நான் உடல்நலத்துடன் இருக்கிறேன். அதன் பிறகு நடந்த அனைத்து படப்பிடிப்புகளும் நான் கலந்துகொண்டேன்.
நிறைய பேர் நான் ஊருக்கு சென்றதால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்கள். ஆனால் அது காரணம் இல்லை. நான் உடல் நலம் இல்லாமல் இருந்ததால்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். என்னை ஒரு நடிகையாக நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ’குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் எனக்கு நீங்க காட்டி வரும் அன்பு மிகப்பெரியது. எனவே இந்த நிகழ்ச்சியை நான் என்றும் மிஸ் பண்ண மாட்டேன் என்று ஸ்ருதிகா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com