close
Choose your channels

'சும்மா அதிருதில்ல.. பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலக்கும் தமிழ் பொண்ணு..!

Wednesday, October 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் தமிழ் ஆரம்பித்த அதே நாளில் பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசன் ஆரம்பித்தது என்பதும், சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொடங்கி தொகுத்து வழங்குகிறார் என்பதும் தெரிந்ததே.

பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், அதில் தமிழ் பொண்ணு ஸ்ருதிகா கலந்து கொண்டு உள்ளார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும், சூர்யாவின் 'ஸ்ரீ' உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்தது போலவே, கள்ளங்கபடம் இல்லாமல் சிரித்த முகத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா கலக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவர் பிக் பாஸ் உடன் பேசிக் கொண்டிருக்கும் போது, "சும்மா" என்ற தமிழ் வார்த்தையை பேச்சுவாக்கில் பயன்படுத்தி நிலையில், "சும்மா" என்றால் என்ன என்று பிக் பாஸ் கேட்கிறார்.

அதற்கு ஸ்ருதிகா விளக்கம் கொடுக்கும் காமெடி காட்சிகள் உள்ளதை அடுத்து, ஸ்ருதிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் என்று கமெண்ட் பதிவாகி வருகின்றன. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment