'சும்மா அதிருதில்ல.. பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலக்கும் தமிழ் பொண்ணு..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

பிக் பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் தமிழ் ஆரம்பித்த அதே நாளில் பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசன் ஆரம்பித்தது என்பதும், சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொடங்கி தொகுத்து வழங்குகிறார் என்பதும் தெரிந்ததே.

பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், அதில் தமிழ் பொண்ணு ஸ்ருதிகா கலந்து கொண்டு உள்ளார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும், சூர்யாவின் 'ஸ்ரீ' உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்தது போலவே, கள்ளங்கபடம் இல்லாமல் சிரித்த முகத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா கலக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவர் பிக் பாஸ் உடன் பேசிக் கொண்டிருக்கும் போது, சும்மா என்ற தமிழ் வார்த்தையை பேச்சுவாக்கில் பயன்படுத்தி நிலையில், சும்மா என்றால் என்ன என்று பிக் பாஸ் கேட்கிறார்.

அதற்கு ஸ்ருதிகா விளக்கம் கொடுக்கும் காமெடி காட்சிகள் உள்ளதை அடுத்து, ஸ்ருதிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் என்று கமெண்ட் பதிவாகி வருகின்றன. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாச்சனாவின் வெளியேற்றத்திற்கு உண்மை காரணம் இதுதானா? மீண்டும் ரீஎண்ட்ரி?

பிக் பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்தில் போட்டியாளர்களில் ஒருவரான சாச்சனா வெளியேற்றப்பட்டது,

'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. சீரியல் நடிகை தான் மணப்பெண்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில்

ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பிக்பாஸ் வீட்டில் ரணகளம்..!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய மூன்றாவது நாளில் ரவீந்தரை ரஞ்சித் அடிக்க ஆவேசமாக பாய்ந்த காட்சிகள் ப்ரோமோவில் வெளியானதை

தனுஷுடன் மீண்டும் ஒரு திரைப்படம்.. தேசிய விருது பெற்ற பின் உறுதி செய்த நித்யா மேனன்..!

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த விருதை குடியரசு

கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் முக்கிய அறிவிப்பு.. வேற லெவல் வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தக்லைப்' என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில்