திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு 'நச்சென' பதிலளித்த ஸ்ருதிஹாசன்


Send us your feedback to audioarticles@vaarta.com


உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்தார் என்பதும் அந்த காதலும் சமீபத்தில் பிரேக் அப் ஆனது என்பதும் தெரிந்ததே. தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடர், விஜய்சேதுபதியுடன் 'லாபம்' என ஸ்ருதிஹாசன் திரையுலகில் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் ஸ்ருதியிடம் 'உங்கள் திருமணம் எப்போது? திருமணத்தின்போது எங்களுக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் அனைவரும் உங்கள் திருமணத்தில் கலந்து கொள்வோம்' என்று கூறியிருந்தார்
ரசிகரின் இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாஸன், 'என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்' என்று நச்சென பதிலளித்துள்ளார். இந்த பதிலில் இருந்து ஸ்ருதிஹாசனின் திருமணம் இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments