எனக்கு தமிழர்களும், இந்திக்காரர்களும் ஓட்டு போட மாட்டார்கள்.. சோகத்தில் ஸ்ருதிகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எனக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் ஓட்டு போட மாட்டார்கள், ஹிந்திக்காரர்கள் ஓட்டு போட மாட்டார்கள். எனவே, நான் இந்த வாரம் எலிமினேஷன் ஆகி விடுவேன் என்று சக போட்டியாளரிடம் ஸ்ருதிகா கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பிக் பாஸ் ஆரம்பித்த அதே நாளில், ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசன் ஆரம்பித்தது என்பதும், சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில், முதல் முறையாக ஒரு தமிழ் பெண் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்பதும், பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் ஸ்ருதிகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை அடுத்து, அவர் பட்டையை கிளப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவருடைய கள்ளங்கபடமில்லாத வெகுளித்தனமான பேச்சை சல்மான் கான் மிகவும் ரசித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஒரு தமிழ் பெண்ணாக இருந்த போதிலும், ஹிந்தி பேசும் மக்கள் மத்தியில் கூட அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இருப்பினும், ஸ்ருதிகா தனது சக போட்டியாளர்களிடம் பேசியபோது, 'இந்த வாரம் நான் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழ் பிக் பாஸ் நடந்து வருவதால், தமிழர்கள் எல்லோரும் அதற்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஹிந்தி படத்தில் நான் நடிக்கவில்லை என்பதால், ஹிந்தி பேசும் மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. எனவே, இந்த வாரம் வெளியேறி விடுவேன்' என்று கூறுகிறார். ஆனால், ஹிந்தி பேசும் மக்களிடம் மட்டுமின்றி, தமிழகத்திலும் அவருக்கு ஆதரவு குவிந்திருப்பது, உள்ளே இருக்கும் அவருக்கு தெரியவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது."
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments