எனக்கு தமிழர்களும், இந்திக்காரர்களும் ஓட்டு போட மாட்டார்கள்.. சோகத்தில் ஸ்ருதிகா..!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

எனக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் ஓட்டு போட மாட்டார்கள், ஹிந்திக்காரர்கள் ஓட்டு போட மாட்டார்கள். எனவே, நான் இந்த வாரம் எலிமினேஷன் ஆகி விடுவேன் என்று சக போட்டியாளரிடம் ஸ்ருதிகா கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் பிக் பாஸ் ஆரம்பித்த அதே நாளில், ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசன் ஆரம்பித்தது என்பதும், சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசனில், முதல் முறையாக ஒரு தமிழ் பெண் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்பதும், பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் ஸ்ருதிகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை அடுத்து, அவர் பட்டையை கிளப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவருடைய கள்ளங்கபடமில்லாத வெகுளித்தனமான பேச்சை சல்மான் கான் மிகவும் ரசித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஒரு தமிழ் பெண்ணாக இருந்த போதிலும், ஹிந்தி பேசும் மக்கள் மத்தியில் கூட அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இருப்பினும், ஸ்ருதிகா தனது சக போட்டியாளர்களிடம் பேசியபோது, 'இந்த வாரம் நான் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழ் பிக் பாஸ் நடந்து வருவதால், தமிழர்கள் எல்லோரும் அதற்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஹிந்தி படத்தில் நான் நடிக்கவில்லை என்பதால், ஹிந்தி பேசும் மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. எனவே, இந்த வாரம் வெளியேறி விடுவேன்' என்று கூறுகிறார். ஆனால், ஹிந்தி பேசும் மக்களிடம் மட்டுமின்றி, தமிழகத்திலும் அவருக்கு ஆதரவு குவிந்திருப்பது, உள்ளே இருக்கும் அவருக்கு தெரியவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

More News

அந்த மனுஷனுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குது: திருமண வதந்தி குறித்து 'பாக்கியலட்சுமி' நடிகை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வரும்  விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும்

சரியான சந்தர்ப்பத்தில் சரியான பால் போட்டீங்க.. தர்ஷாவை காய்ச்சி எடுக்கும் விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் விஜய் சேதுபதியால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி

மாநாட்டிற்கு இவர்கள் எல்லாம் வரவேண்டாம்: அன்பு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு ஒரு சிலர் வர வேண்டாம்

நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு என்ன ஆச்சு? படுத்த படுக்கையாய் மருத்துவமனையில்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'கங்குவா' இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே? அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா