மீண்டும் இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்.. இம்முறை எந்த படத்திற்கு?

  • IndiaGlitz, [Monday,February 12 2024]

கடந்த சில வாரங்களுக்கு முன் பார்த்திபன் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடினார் என்பதும் இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமான் கம்போஸ் செய்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் டி இமானின் இசையில் மீண்டும் ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி. இமான் தனது சமூக வலைத்தளத்தில் ’ஸ்ருதிஹாசன் எனது இசையில் மீண்டும் ஒரு பாடலை பாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்த பாடல் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கி வரும் ’லெவன்’ என்ற படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்காக அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நவீன் சந்திரா, ரேயா ஹரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இமான் இசையில், கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாகசங்களுக்கு தயார்: டூப் இல்லாமல் போர்க்காட்சிகளில் நடிக்கும் தனுஷ் பட நாயகி..

தனுஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தான் நடிக்கும் அடுத்த படத்தில் போர் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து சாகசங்களுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் செல்போனை பிடுங்கி, கூட்டத்தில் தூக்கியெறிந்த திரை பிரபலம்.. அதிர்ச்சி வீடியோ..!

 திரை உலக பிரபலம் ஒருவர் ரசிகரின் செல்போனை பிடுங்கி கூட்டத்தினர் மத்தியில் தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து அந்த பிரபலத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

மீண்டும் நடிப்புக்கு திரும்பி விட்டேன்.. அடுத்த வாரம் ஒரு சர்ப்ரைஸ்: சமந்தா

 நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக நடிப்பிற்கு ஓய்வு அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டதாக அவர் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

'எஸ்.கே.21’ படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல்.. இன்று ஒரு செம்ம விருந்து..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில்,

என்ன ஆச்சு சிம்ரனுக்கு.. இவ்வளவு உக்கிரமா ஆடுறாங்க.. வைரல் வீடியோ..!

நடிகை சிம்ரன் மிகவும் உக்கிரமாக நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு 'என்ன ஆச்சு சிம்ரனுக்கு' போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது