ஸ்ருதிஹாசனின் ஆன்மீக டாட்டூ.. பகுத்தறிவாளர் கமலுக்கு இப்படி ஒரு மகளா?

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார் என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் ஆன்மீகத்தின் அடிப்படையில் தனது உடலில் ஒரு டாட்டுவை வரைந்து உள்ளதை அடுத்து அது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஆட்டம் கொண்டவர் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது ஆன்மீக கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தனது உடலில் முருகனின் வேல் குறித்த டாட்டுவை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது ’நான் எப்போதுமே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர், முருகப்பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு, இந்த டாட்டு மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என்று தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

மேலும் பச்சை குத்துவது என்பது என்னுடைய வழக்கமான ஒன்றாகும், தற்போது ஆன்மீகத்தின் தொடர்புடைய பச்சை குத்த வேண்டும் என்று விரும்பினேன், வேறு எதுவும் குறிப்பிட்ட நிகழ்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்மீகம் என்பது என்னை அடக்கமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’வீரசிம்ஹ ரெட்டி’ மற்றும் ’வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ’சலார்’ என்ற படத்திலும் ’தி ஐ’ என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராம் சரண் தேஜா மனைவி உபாசனா வளைகாப்பு புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்..!

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் 'வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார்

இயக்குனர் லிங்குசாமியின் சிறை தண்டனை விவகாரத்தில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட் உத்தரவு

புதிய கெட்டப்பில் லெஜண்ட் சரவணன்.. அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாரா?

பிரபல தொழில் அதிபரும் 'தி லெஜண்ட்' என்ற படத்தை தயாரித்து நடித்தவருமான லெஜண்ட் சரவணன் புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் அடுத்த படத்திற்கு தயார்

'தளபதி 68' படத்தின் தயாரிப்பாளர் இவர் தானாம்.. அப்ப இயக்குனர் அட்லி இல்லையா?

தளபதி விஜய் நடித்து வரும் 67-வது திரைப்படம் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று

மனைவி குழந்தைகளுடன் நடிகர் ரகுமான்.. ரம்ஜான் கொண்டாடிய க்யூட் புகைப்படங்கள்..!

 தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவரான ரகுமான் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல்