ஸ்ருதிஹாசன் பிறந்த நாளில் விஜய்சேதுபதி படக்குழு தரும் பரிசு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து அவர் நடித்தி வரும் ’லாபம்’ என்ற படத்தின் படக்குழுவினர் ஒரு பாடலை பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளனர்
விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் ’லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான் இசையில் யுகபாரதி எழுதிய பாடலைத்தான் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்
இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் இந்த பாடல் நாளை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன், சாய் ஹன்சிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எஸ்பி ஜகந்நாதன் இயக்கி வருகிறார். இமான் இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்சேதுபதி தயாரித்து வருகிறார்.
Glimpse of a Single coming ur way tmrw on @shrutihaasan 's birthday from Team #Laabam
— D.IMMAN (@immancomposer) January 27, 2020
A @immancomposer Musical, Lyrics Penned By @YugabhaarathiYb@VijaySethuOffl @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @SaiDhanshika @yogeshdir @sathishoffl @LahariMusic @proyuvraaj Praise God! pic.twitter.com/BQaAIn4Yys
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com