ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த 'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊர்வசி ஊர்வசி' பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலுக்கான வரிகளை அவரது ரசிகர்கள் அனுப்பி வந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் ஊர்வசி பாடலை போலவே மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' படத்தில் இடம்பெற்ற 'காட்டுச்சிரிக்கி' என்ற பாடலையும் ரஹ்மான் மறு உருவாக்கம் செய்துள்ளார். இந்த படத்தின் இந்தி பதிப்பில் பாடனாலான ரான்ஜா..ரான்ஜா` என்ற இந்தி பாடலின் மறு உருவாக்க பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இந்த பாடல் நேற்று பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய இந்த முதல் பாடல், இருதரப்பு ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com