கொரோனா வைரஸ் பயம்: ஊரை மாற்றிய ஸ்ருதிஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையில் இருந்து தனது வீட்டை திடீரென மாற்றிவிட்டு வேறு ஊருக்கு சென்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் இருந்து கொண்டே தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் மும்பையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவர் மும்பை வீட்டை காலி செய்துவிட்டு சென்னை அல்லது ஹைதராபாத் குடியேற முடிவு செய்தார்
ஆனால் மும்பையை அடுத்த சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அவர் ஹைதராபாத்தை தேர்வு செய்து அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படத்திலும் ரவி தேஜா நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டு வருவதால் அவர் ஹைதராபாத்தில் இருந்து கொண்டே படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘லாபம்’ என்ற தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு உள்ளபோது மட்டும் அவர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பயம் காரணமாக மும்பையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு ஹைதராபாத்தில் ஸ்ருதிஹாசன் குடியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com