கமல்ஹாசன் பயோபிக் படத்தை இயக்க மாட்டேன்.. காரணம் இதுதான்: ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

இசைஞானி இளையராஜா உட்பட பல திரையுலக பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் கமல்ஹாசன் பயோபிக் திரைப்படத்தை நான் இயக்க மாட்டேன் என்று கூறிய அவரது மகள் ஸ்ருதிஹாசன் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தையர் தினம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் இயக்குவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஸ்ருதிஹாசன் ‘கண்டிப்பாக நான் எனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க மாட்டேன், நான் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்தால் அது ஒரு தலைப்பட்சமாக இருக்கும், அந்த படத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இருக்காது, எனவே அவரது வாழ்க்கையை நியாயம் கற்பிக்கும் வகையில் இயக்குவதற்கு இங்கே நிறைய திறமையான இயக்குனர்கள் உள்ளார்கள், அவர்களில் ஒருவர் அந்த படத்தை எடுக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் ஏற்கனவே ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த படம் அவரது தந்தை கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

More News

'மகாராஜா' படத்தில் நடிக்க விரும்பிய பிரபல ஹீரோ.. ஆனால் விஜய்சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

'மகாராஜா' திரைப்படத்தின் கதையை கேட்டு பிரபல ஹீரோ ஒருவர் அதில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால் விஜய் சேதுபதி நடித்ததால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது

மொட்டைத் தலையுடன் காட்சி அளிக்கும் 'காதல்' பட நடிகை.. என்ன ஆச்சு? வைரல் வீடியோ..!

பரத், சந்தியா நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'காதல்' திரைப்படத்தில் நடித்த நடிகை திடீரென மொட்டை தலையுடன் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

மிகப்பெரிய அவமானம்.. ஏண்டா நடிச்சோம்ன்னு இருக்கு: 'எதிர்நீச்சல்' சீரியல் குறித்து வேல ராமமூர்த்தி..!

'எதிர்நீச்சல்' சீரியலில் ஜி. மாரிமுத்து கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென காலமானதால் அவரது குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்த நிலையில்

குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி விட்ட விக்கி.. உலக தந்தையர் தினத்தில் க்யூட் வீடியோ..!

இன்று உலகம் முழுவதும் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து

பிறந்து 20 நாள் தான்.. க்யூட் குழந்தையுடன் போட்டோஷூட் எடுத்த நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் அவர் எடுத்துள்ள க்யூட் போட்டோஷூட்