கமல்-ரஜினி அரசியல் இணைப்பு குறித்து ஸ்ருதிஹாசன் கருத்து!

  • IndiaGlitz, [Sunday,November 24 2019]

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த இணைப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் தனியார் செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு வந்த கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், ‘கமல்ஹாசன்-ரஜினிகாந்த் இணைப்பு குறித்து தனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தந்தை கமல்ஹாசனின் அரசியலுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் தெரிவித்தார். மேலும் தனது தந்தை கமல்ஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு அளிப்பேன் என்றும் ஸ்ருதிஹாசன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் எதிர்காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் ஆல்பம் பாடல்கள் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் மற்றொரு கேள்வி பதிலளித்தார்.

ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்தியை அறிந்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த வணிக வளாகத்தில் கூடிய நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தி ஸ்ருதிஹாசனை பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்தனர்.