இருளில் இருந்து வெளியே வந்துவிட்டாரா ஸ்ருதிஹாசன்? பிரேக் அப் குறித்த மறைமுக பதிவு?

  • IndiaGlitz, [Wednesday,May 01 2024]

நடிகை ஸ்ருதிஹாசன், டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ருதிஹாசனை சாந்தனுவும், சாந்தனுவை ஸ்ருதிஹாசனும் சமூக வலைத்தளங்களில் அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் கூறப்படுவதை அடுத்து இருவரும் சில பதிவுகளையும் டெலிட் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து கிட்டத்தட்ட திருமணம் வரை சென்ற பின் அந்த காதல் பிரேக்கப் ஆன நிலையில் தற்போது சாந்தனு காதலும் பிரேல் அப் ஆகியுள்ளதாக கூறப்பட்டாலும் ஸ்ருதிஹாசன் இதுவரை தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தங்கை அக்சராஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’நான் ஒளியை உணர்கிறேன், இந்த தருணங்களுக்காக நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக, நன்றியுடைவராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் இந்த பதிவில் இதுவரை நீங்கள் இருட்டில் வாழ்ந்திருந்தீர்கள், இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளீர்கள் என்று மறைமுகமாக பிரேக் அப் பை குறிப்பிடுகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காதலர் சாந்தனுவை பிரிந்ததை தான் இருளிலிருந்து ஒளிக்கு வந்து விட்டேன் என்பதை மறைமுகமாக நான் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளதாக பலர் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.