'வேதாளம்' படத்தில் இருந்து விடைபெற்றார் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்கள் என்றால் அனைவருக்கும் அஜீத் மற்றும் விஜய் பெயர்கள்தான் ஞாபகம் வரும். இவர்களில் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதே பெரிய விஷயம் என முன்னணி நடிகைகள் கருதி வரும் நிலையில் இருவரது படங்களில் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றவர் உலக நாயகனின் வாரிசு நடிகை ஸ்ருதிஹாசன்.

இளையதளபதி விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வரும் தீபாவளி தினத்தில் அஜீத்துடன் அவர் நடித்த 'வேதாளம்' திரைப்படம் ரிலீசாக உள்ளது.

'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர்களிடம் இருந்து நேற்று ஸ்ருதிஹாசன் விடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய ஸ்ருதிஹாசன், 'வேதாளம் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் மூலம் பாசிட்டிவ் அனுபவங்களும் பெரும் மகிழ்ச்சியும் எனக்கு கிடைத்தது' என்று கூறி விடைபெற்றார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'தல' தரிசனத்திற்காக அஜீத் ரசிகர்கள் இன்று நள்ளிரவு வரை விழித்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.