நாயகிக்கு முக்கியத்தும் தரும் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்: அடுத்த படம் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதி உடன் ‘லாபம்’ பிரபாஸுடன் ’சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ’வக்கீல் சாகிப்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு வித்தியாசமான கேரக்டர் மற்றும் கதையுடன் என்னை மீண்டும் சந்திப்பீர்கள் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளதால் ஸ்ருதிஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று அந்த படம் நாயகியின் கேரக்டருக்கு முக்கியத்துவமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த பதிவில் அவர் ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த புகைப்படத்துக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது