திருமண வதந்தி குறித்து ஸ்ருதிஹாசனின் மெச்சூரிட்டி பதில்
- IndiaGlitz, [Monday,August 08 2016]
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் 'மலர்' கேரக்டர், தந்தை கமல்ஹாசனுடன் 'சபாஷ் நாயுடு', சூர்யாவுடன் 'எஸ்3', ஆகிய படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகை அசினை அடுத்து ஸ்ருதிஹாசனும் ஒரு மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாகவும், இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் இணையதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வதந்தி குறித்து ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டரில் 'ம் அப்புறம்' என நகைச்சுவையுடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.தனது திருமண வதந்தி குறித்து கோபப்படாமல் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்ட ஸ்ருதிஹாசனின் குணம், அவருடைய மெச்சூரிட்டியை வெளிப்படுத்துவதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.