கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தில் இணைந்த கமல் மகள்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்து வரும் ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் மகள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வணக்கம் சென்னை’ மற்றும் ’காளி’ போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நாயகன் நாயகியாக நடிக்கும் ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன், பானு, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி, பாடகர் மனோ ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலை கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து கிருத்திகா உதயநிதி கூறியபோது, ‘காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலை பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ருதிஹாசன், சினேகன் ஆகியோர் உருவாக்கிய இந்த பாடலை கேட்க தயாராக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இதில் ஏஆர் ரகுமான், ஸ்ருதிஹாசன், கிருத்திகா உதயநிதி மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் உள்ளனர். இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கம்போசிங்கில் முதன் முதலாக ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
It was so fun and an absolute delight to record my 1st song of #KadhalikkaNeramillai with @arrahman @shrutihaasan @KavingarSnekan
— kiruthiga udhayanidh (@astrokiru) February 29, 2024
Can't wait to share it with you al!
“காதலிக்க நேரமில்லை”@actor_jayamravi@MenenNithya@astrokiru@RedGiantMovies_@iYogiBabu @VinayRai1809 pic.twitter.com/wKf2lkRvUP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments