விஜய்சேதுபதியின் 'லாபத்தில்' பங்கு பெறும் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

கோலிவுட் திரையுலகின் பிசியான நடிகர்களில் ஒருவராகிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது 'மாமனிதன்', சிந்துபாத்' உள்பட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுககுமாரின் அடுத்த படத்திலும் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'லாபம்' என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விஜய்சேதுபதி நடித்த 'புறம்போக்கு' உள்பட பல படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதிஹாசன் இணையவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக ஜெகபதிபாபு நடிக்கவுள்ளார்.