ரஜினி மகள் மாதிரியா? அய்யய்யோ வாய்ப்பே இல்லை: ஸ்ருதிஹாசன் பேட்டி..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

ரஜினி மகள்கள் அவர்களுடைய அப்பாவை வைத்து திரைப்படம் இயக்கிய நிலையில் நீங்கள் உங்கள் அப்பாவை வைத்து எப்போது திரைப்படம் இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் எடுத்து உள்ளனர் என்பது தெரிந்தது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’கோச்சடையான்’ என்ற திரைப்படத்தையும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தையும் ரஜினியை வைத்து எடுத்துள்ளனர். மேலும் ரஜினியை வைத்து மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பேட்டி அளித்த போது ’ரஜினியின் மகள்கள் அவர்களுடைய அப்பாவை வைத்து திரைப்படம் இயக்கியது போல், நீங்கள் எப்போது உங்கள் அப்பாவை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறீர்கள் என்று கேட்டனர்.

அவருக்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் ’அய்யய்யோ, அப்பாவை வைத்தா? வாய்ப்பே இல்லை’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.