ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்: ரசிகர்களுக்கு 'இரட்டை' விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,December 06 2022]

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.

இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது 'கே. ஜி. எஃப்' புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடினமாக இருந்த 'தங்கலான்' படப்பிடிப்பு.. 'பேக்கப்' சொன்னதும் விக்ரம் செஞ்ச வேலையை பாருங்க!

 விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒகேனக்கல் அருகே

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 'துணிவு' புரமோஷன். தரமான சம்பவம் செய்த ரசிகர்!

தற்போது கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் 'துணிவு' படத்தின் பேனரை காட்டிய அஜித் ரசிகர் ஒருவரின்

'வாரிசு' படத்தில் பாட்டு மட்டும் பாடல.. இதையும் செஞ்சிருக்கார் சிம்பு: செம டுவிஸ்ட்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் ஹீரோவா?

லைகா நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தொலைநோக்கு கொண்ட கல்வியாளர்  A. N. ராதாகிருஷ்ணன் மறைவு.. இறுதிச்சடங்கு குறித்த தகவல்

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடம் (MAHER - deemed to - be university) யின் தலைவரும் மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் & முத்துக்குமரன் கல்வி டிரஸ்ட் - ன் நிர்வாக அறங்காவலரும் ஆகிய நாடு போற்றும்