ஐந்து மொழிகளில் பின்னணி பேசி  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதிஹாசன்..!

  • IndiaGlitz, [Monday,August 28 2023]

இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் 'சலார்' படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

'கேஜிஎஃப்' எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்' எனும் இப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்போது 'சலார் -பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர் கதாபாத்திரத்திற்கு அவரே சொந்த குரலில் பின்னணி பேசுகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே பின்னணி பேசுகிறார். அவரது இந்த முயற்சி திரையுலகினரிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'வீரசிம்ஹ ரெட்டி', 'வால்டேர் வீரய்யா' எனும் இரண்டு தெலுங்கு படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும், அவர் தற்போது 'ஹாய் நான்னா', மற்றும் 'தி ஐ' எனும் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

லைகா சுபாஷ்கரன் - விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு: முக்கிய அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் சுபாஸ்கரன் அவர்களை தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சந்தித்து புதிய படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்

'இந்த கதையில எதிரி தான் உன்னை தேடி வருவான்: 'தனி ஒருவன் 2' வீடியோ..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில், உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி

ஆஹா.. செம போட்டியா இருக்கும் போல தெரியுதே.. பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த 18 பேர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து கொண்டிருப்பதையும்

50 வயது நடிகையுடன் பிரேக் அப்? அஜித் பட தயாரிப்பாளர் மகன் வீடியோ வைரல்..!

அஜித் படத்தின் தயாரிப்பாளர் மகனான 38 வயது நடிகர் 50 வயது நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

வடிவேலு குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்.. தாயார் மறைந்த சில மாதங்களில் மீண்டும் ஒரு இழப்பு..!

நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவரது சகோதரர் காலமானது வடிவேலு குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.