close
Choose your channels

'கூலி' திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஸ்ருதிஹாசன்.. சூப்பர் புகைப்படம் வைரல்..!

Friday, July 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை ஸ்ருதிஹாசன் சற்றுமுன் உறுதி செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு நான்கு நாள் மட்டும் நடைபெறும் என்றும் அதன் பின்னர் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்ற நிலையில் இன்று காலை படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ’கூலி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில் ’கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment