கமலின் சூப்பர்ஹிட் பாடலை வித்தியாசமாக மெட்டமைத்து பாடிய ஸ்ருதிஹாசன்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இதனை அடுத்து நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் வித்தியாசமான, நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமலஹாசனின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு வித்தியாசமான மெட்டு அமைத்து அவரே பாடியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கமலஹாசன் நடித்த ’நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ’தென்பாண்டி சீமையிலே’ என்ற இசைஞானி இளையராஜாவின் அற்புதமான பாடலை வித்தியாசமாக கம்போஸ் செய்து அதனை தானே பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதோடு, ஸ்ருதிஹாசனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஸ்ருதிஹாசன் நடிகையாவதற்கு முன்னரே இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியா முழுவதும் பட்டணி கொடுமையால் வீதிக்கு வரும் அமைப்புச்சாரா கூலித் தொழிலாளர்கள்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்தது.

உலகச் சுகாதார அமைப்புடன் மோதல் காட்டிவரும் அதிபர் ட்ரம்ப்!!! அடுத்து என்ன???

கொரோனா பரவல் பற்றிய தகவல்களை சீன அரசு மறைத்துவிட்டதாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டிவருகிறார்.

கொரோனாவுக்கு நடுவில் தேர்தல் நடத்தும் தென்கொரியா!!! நடைமுறை சாத்தியங்கள்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தென்கொரியா நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவருகிறது.

மத்தியஅரசு அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய செயலி”  ஆப் ஏன் விமர்சிக்கப்படுகிறது???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசால் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி “ஆரோக்கிய சேது”

மே 3 வரை எல்லாம் பத்தாது, 2022 வரை சமூக விலகல் வேண்டும்: ஹார்வர்டு பல்கலை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,