ரஜினியின் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன கேரக்டர்? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நேற்று தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் நாகார்ஜுனா ‘கூலி’ படத்தில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டு ஒரு போஸ்டரும் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் கேரக்டரின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் அவர் கையில் ஆவேசமாக ஆயுதத்தை வைத்து நிற்பது போன்று இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு வலிமையான கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினந்தோறும் இந்த படத்தின் ஒரு கேரக்டர் குறித்து அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் நாளை சத்யராஜ் குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.