குத்துச்சண்டை பழகும் ஸ்ருதிஹாசனின் வைரல் வீடியோ: 'சார்பாட்டா பரம்பரை பாதிப்பா?

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த குத்துசண்டை திரைப்படமான ‘சார்பாட்டா பரம்பரை ’படம் வெளியானதிலிருந்து தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பலரும் இணைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துசண்டை பழகிய வீடியோவை பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தருபவர் இர்பான் கான் என்றும் இவர் பல திரையுலக பிரபலங்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோவை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.