திருமணம் குறித்து தைரியமான கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்: ரசிகர்கள் ஷாக்!

  • IndiaGlitz, [Thursday,June 30 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து தனது தைரியமான கருத்தை தெரிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசனிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றி. அவரது திருமணம் குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு ’திமணம் குறித்து தனக்கு எந்தவித ஐடியாவும் இல்லை என்றும் திருமணம் குறித்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை’ என்றும் அவர் தைரியமாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் காதலர் ஷாந்தவுடன் உறவு சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை என ஸ்ருதிஹாசன் கூறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

சமீபத்தில் திருமணமான நடிகை ஆலியாபட் கர்ப்பமான தகவல் அறிந்ததும் அவருக்கு தனது சமூக வலைதளங்கள் மூலம் தனது வாழ்த்துக்களை ஸ்ருதிஹாசன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன், நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.