தயாரிப்பாளராக மாறினார் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Thursday,August 06 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவரது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அவரது மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் புதியதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவர் "இசிட்ரோ" என்ற பெயர் வைத்துள்ளார். முதலில் இந்த நிறுவனத்தின் மூலம் குறும்படங்கள் மியூசிக் வீடியோஸ், அனிமேஷன் படங்கள் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். திறமையான இசையார்வம் மிகுதியாக உள்ளவர்களை வைத்து மியூசிக் ஆல்பங்கள் தயாரிப்பதுதான் தற்போதைய திட்டம் என்றும் எதிர்காலத்தில் இந்த நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க ஸ்ருதிஹாசன் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசனின் இந்த முயற்சிக்கு அவரது தந்தை கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய், அஜீத், மகேஷ்பாபு, அஜய்தேவ்கான் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியான நடிகையாக இருந்து கொண்டே தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதிஹாசனின் இந்த முயற்சி வெற்றி பெற அவருக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.