காதலரை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்து வைத்தாரா ஸ்ருதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைக்கேல் கார்சலை தாயார் சரிகாவுக்கு ஸ்ருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ருதி-கார்சல் காதலுக்கு சரிகா ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் ஸ்ருதிஹாசனும் மைக்கேல் கார்சலும் கலந்து கொண்டனர். இருவரும் தமிழரின் பாரம்பரிய உடையணிந்து கைகோர்த்து கொண்டே திருமணத்தில் கலந்து கொண்டது இந்த திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த நிலையில் இதே திருமண விழாவிற்கு வருகை தந்திருந்த கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்வதை போல் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சல் மூவரும் உள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே கூடிய விரைவில் ஸ்ருதிஹாசன் மணமேடை ஏற வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com