மனோரமாவுக்கு திருஷ்டி கழித்த கமல் மகள்

  • IndiaGlitz, [Monday,October 12 2015]

ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அதிசய நாயகி மனோரமா நம்மைவிட்டு மறைந்த சோகத்தில் தமிழ் திரையுலகமே மூழ்கியுள்ள நிலையில் அவருக்கு கவிதையஞ்சலி செலுத்தியிருக்கின்றார் உலக நாயகன் கமல்ஹாசன். உலகநாயகன் டியூப் இணையதளத்தில் மனோரமா குறித்து சிலவற்றை கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பிறந்தபோது அவரை பார்க்க வந்திருந்த மனோரமா, கிராமத்து பாணியில் முகத்துக்கு திருஷ்டி கழித்து, நெற்றிப் பொட்டில் புறங்கையை மடக்கி சொடக்கிய வித்தையை பார்த்து எனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


அதே மனோரமாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்த ஸ்ருதிஹாசன், அவருக்கு திருஷ்டி கழித்து சொடக்கியுள்ளார். அப்போது மனோரமா நெகிழ்ச்சியுடன் 'எனக்கு திருஷ்டி கழிக்க யாருமே இல்லை, ராசாத்தி நீதான் இருக்கின்றாய்' என்றாராம். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை கமல்ஹாசன் தனது சேனலில் கூறியுள்ளார்.

மேலும் நாகேஷும் மனோரமாவும் தமிழ் சினிமாவின் மம்மிடாடி என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். களத்தூர் கண்ணம்மா முதல் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் வரை பல படங்களில் மனோரமாவுடன் கமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மசாலா படம் - சமூக வலைத்தள விமர்சகர்களுக்கு சாட்டையடி

ஒரு படம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த படத்தின் கதை தற்கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும்....

ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் ராகவா லாரன்ஸ்?

காஞ்சனா 2' என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் இரண்டு படங்களில் நடித்து இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

'புலி' ஒளிப்பதிவாளருடன் இணையும் 'மங்காத்தா' நடிகை?

விஜய் நடித்த 'புலி' உள்பட பல முன்னணி நாயகர்கள் நடித்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், 'சதுரங்க வேட்டை' படத்தின் நாயகனுமான நட்டி நட்ராஜ் தற்போது 'எங்கிட்ட மோதாதே' என்ற படத்தில் நடித்து வருகிறார்...

விஜய்யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல். ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.....

மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் நன்கொடை

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 61ஆம் ஆண்டு தொடக்கவிழா, மூத்த பத்திரிகையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 60-ஆம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா என முப்பெரும்விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது....