ஒரு படத்தில் 5 தயாரிப்பாளர்கள்.. 5 பேருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஸ்ருதி ஹரி கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

ஒரு தமிழ் திரைப்படத்தை 5 தயாரிப்பாளர்கள் தயாரித்தார்கள் என்றும் அந்த 5 பேருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றும் நடிகை ஸ்ருதி ஹரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்தே நடிகைகள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களை கூறி வருகின்றனர் என்பதும் இதன் காரணமாக சில நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகையான ஸ்ருதி ஹரி தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’நிலா’ ’நிபுணன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது ’தி வெட்ரிக்ட்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய ஸ்ருதி ஹரி, ஒரு பிரபல கன்னட படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் என்னை கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்புவதாக கூறினார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் மொத்தம் 5 தயாரிப்பாளர்கள் என்றும் 5 தயாரிப்பாளர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறிய போது செருப்பை கழட்டி அடிப்பேன் என்று நான் அவர்களுக்கு பதில் அளித்தேன் என்றும், அதன் பின்னர் எனக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

என்ன ஆனாலும் தவறான விஷயங்களுக்கு பெண்கள் தைரியமாக நோ சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.