சூர்யாவுக்கு உதவும் பெண் சிஐடி அதிகாரி

  • IndiaGlitz, [Wednesday,December 09 2015]

'பசங்க 2', '24' படங்களை அடுத்து சூர்யா நடிக்கவுள்ள 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவிருந்த நிலையில் சென்னையை போலவே கொல்கத்தாவில் மழை பெய்வதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் 'சிங்கம் 2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தபோதிலும், அவரை ஒருதலையாக காதலிக்கும் பள்ளி மாணவி கேரக்டரில் ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால் சிங்கம் 3' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் சூர்யாவை காதலிக்கும் வேடத்தில் நடிக்கவில்லை என்றும், காவல்துறை அதிகாரியான சூர்யாவுக்கு உதவி செய்யும் பெண் சி.ஐ.டி அதிகாரியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஸ்ருதிஹாசன் முதன்முதலாக இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பி கொல்கத்தாவிலும் பின்னர் சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

More News

சென்னை மக்களுக்காக வருந்தும் 'தெறி' நாயகி

விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை எமிஜாக்சன், சென்னை வெள்ளத்தின் துயரில் பங்கெடுத்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்....

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் விடுத்த பிறந்தநாள் வேண்டுகோள்

தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் வெள்ளம் காரணமாக கடும் அவதியில் இருக்கும் நிலையில் தன்னுடைய பிறந்த நாள்...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இயக்குனர் மகேந்திரன். போலீஸார் மீட்பு

சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், தகவல்...

சென்னை வெள்ளம்: மணிரத்னத்தின் மருத்துவ உதவி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகினர்களின் நிவாரண உதவிகள் எதிர்பார்த்ததை...

வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜீத்தின் பங்கு

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலிவுட் நடிகர்கள் பலர் தானாக முன்வந்து உதவிக்கரம்...