வாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி?

  • IndiaGlitz, [Tuesday,July 25 2017]

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அரசியலில் குதிக்கும் சூழ்நிலை தென்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிக அதிகமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் கமல், ரஜினி ஆகிய இருவரும் ஒன்றிணைந்து கட்சி ஆரம்பித்தால் அது இப்போது இருக்கும் கட்சிகளின் பலத்தைவிட பெரிதாக இருக்கும் என்று அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கமல் மகள் ஸ்ருதிஹாசனும், கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி மகள் செளந்தர்யாவும் தனித்தனியே கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தலத்தில் கூறியபோது, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அரசியலுக்கு அவர் வரும் பட்சத்தில் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என கூறியுள்ளார்.

இதேபோல் கமல் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கூறிய செளந்தர்யா ரஜினிகாந்த், 'கமல் சார் என் அப்பாவின் நீண்டகால நண்பர். எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நட்பு அது. கமல் சாருக்கு எதிலும் தீர்க்க தரிசனம் உண்டு. எதையும் தெரிந்து கொள்ளாமல் அவர் பேச மாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' என்று கூறியுள்ளார்.

எனவே வாரிசுகள் இருவரும் அரசியலுக்கு வர பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் கமல், ரஜினி இருவரும் இணைந்து விரைவில் களமிறங்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரூபா ஐபிஎஸ்: திரைப்படம் ஆகிறதா சசிகலா சலுகை விவகாரம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி ஜெயில் உயரதிகாரிகளுக்கு கைமாறிய சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது...

போதை பொருள் விவகாரத்தில் மேனேஜர் கைது குறித்து காஜல் அகர்வால் விளக்கம்

சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னனி நட்சத்திரங்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் மேல் விசாரணைக்கு ஆளானார்கள்...

14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்!

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்று முன் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்...

'கக்கூஸ்' ஆவணப்பட பெண் இயக்குனர் திவ்யபாரதி திடீர் கைது

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக போராடிய மாணவி வளர்மதியை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் சற்றுமுன் பிரபல சமூகப் போராளியும், 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உதிராத புகழ் கொண்ட 'உதிரிப்பூக்கள்' மகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் எத்தனையோ இயக்குனர் தோன்றியிருந்தாலும் ஒருசிலர் மட்டுமே புதுமையை புகுத்தும் தைரியம் கொண்டவர்களாக இருந்தனர்.