வாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அரசியலில் குதிக்கும் சூழ்நிலை தென்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிக அதிகமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் கமல், ரஜினி ஆகிய இருவரும் ஒன்றிணைந்து கட்சி ஆரம்பித்தால் அது இப்போது இருக்கும் கட்சிகளின் பலத்தைவிட பெரிதாக இருக்கும் என்று அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கமல் மகள் ஸ்ருதிஹாசனும், கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி மகள் செளந்தர்யாவும் தனித்தனியே கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தலத்தில் கூறியபோது, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அரசியலுக்கு அவர் வரும் பட்சத்தில் தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என கூறியுள்ளார்.
இதேபோல் கமல் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கூறிய செளந்தர்யா ரஜினிகாந்த், 'கமல் சார் என் அப்பாவின் நீண்டகால நண்பர். எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நட்பு அது. கமல் சாருக்கு எதிலும் தீர்க்க தரிசனம் உண்டு. எதையும் தெரிந்து கொள்ளாமல் அவர் பேச மாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' என்று கூறியுள்ளார்.
எனவே வாரிசுகள் இருவரும் அரசியலுக்கு வர பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் கமல், ரஜினி இருவரும் இணைந்து விரைவில் களமிறங்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments