close
Choose your channels

மகளுடன் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா.. ஆனாலும் குவியும் கண்டனங்கள்..!

Tuesday, June 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயா தனது மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொன்னாலும் சில ரசிகர்கள் அவரது காஸ்ட்யூமுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா என்பதும் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் இந்த குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வார் என்றும் தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரது காஸ்டியூமுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்தது. இவ்வளவு மோசமான காஸ்ட்யூம் இதுவரை பார்த்ததே இல்லை என பலர் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது அதே காஸ்டியூமில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா சரண் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்த போதிலும் ஒரு சிலர் கமெண்ட்களில் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment