குழந்தை பிறந்ததை ஒருவருடம் கழித்து வெளியிட்ட பிரபல தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Monday,October 11 2021]

பிரபல தமிழ் நடிகை ஒருவர் தனக்கு குழந்தை பிறந்ததை ஒரு வருடம் கழித்து ரசிகர்களுக்கு அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்துடன் ’சிவாஜி’ தனுஷுடன் ’திருவிளையாடல் ஆரம்பம்’ விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகள்’ விக்ரமுடன் ’கந்தசாமி’ உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா என்பது தெரிந்ததே.

இவரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் கொரோனா லாக்டவுன் நேரத்தில் அவர் வெளிநாட்டில் தான் முழுக்க முழுக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென நடிகை ஸ்ரேயா தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் கூறியபோது ’கொரோனா என்ற கடினமான சூழல் நிலவிய காலகட்டத்தில் தனக்கு அழகான தேவதை பிறந்ததாகவும் குழந்தை பிறட்ந்ஹு ஒரு வருடம் ஆகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள ஸ்ரேயா சரணுக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.