close
Choose your channels

கணவரிடம் சிறு பிள்ளையாக மாறி கெஞ்சும் முன்னணி நடிகை… வைரல் இன்ஸ்டா பதிவு!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், சிம்பு எனத் தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களோடும் நடித்து உள்ளார். அந்த வகையில் “சிவாஜி“ படத்தின் வெற்றியால் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் முன்னணி இடத்தைப் பிடித்தார். பின்னர் ரஷ்ய இசைக் கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது கொரோனாவிற்கு பிறகு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் lift me up baby எனக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டு உள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. அதில் சிறு குழந்தை நடக்க முடியாமல் தூக்கச் சொல்லி கெஞ்சுவது போல கணவரிடம் நடிகை ஸ்ரேயா சரண் கொஞ்சும் புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து உள்ளது.

அதேபோல இந்தச் சுற்றுலாவில் மறக்க முடியாத இன்னொரு அனுபவமாக, மான் ஒன்று ஸ்ரேயாவை அலற விட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்காக மான் கூட்டத்திற்கு நடுவே ஸ்ரேயா அமர்ந்து இருக்க, இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மான் ஒன்று அவர் மீது திடீரென பாய்ந்தது. ஆனால் சுதாரித்துக் கொண்ட ஸ்ரேயா படு வேகமாக எழுந்து ஓடிவிட்டார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment