மழலை மொழி இனிதே… தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகை ஸ்ரேயா!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்டரேவ் கோசீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சினிமாக்களில் கவனம் செலுத்திவந்த அவர் லாக் டவுன் நேரத்தில் தனது கணவருடன் வெளிநாட்டிலேயே வசித்து வந்தார்.

இதையடுத்து லாக்டவுன் நேரத்தில் தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என்றும் அதற்கு “ராதா“ என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதற்கு ஏராளமான லைக்ஸ்குகள் குவிந்து வருகிறது.